தற்போதைய செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை.. வீட்டிற்கே சென்று டோக்கன்.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..

தந்தி டிவி

மகளிர் உரிமைத் தொகைக்கான டோக்கன், விண்ணப்பம் விநியோக பணி இன்று முதல் துவங்கியுள்ளது...

விண்ணப்ப பதிவு முகாம்கள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று முதல் நியாய விலைக் கடைப் பணியாளர்கள் விண்ணப்பம் மற்றும் டோக்கனை ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என்றும், விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை எனவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. திருவல்லிக்கேணி பகுதியில் நியாய விலை கடை ஊழியர்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று குடும்ப தலைவிகளுக்கு விநியோகித்து வருகின்றனர். இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு டோக்கன்கள் விநியோகம் நடைபெற உள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்