தற்போதைய செய்திகள்

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு- ஜிப்மர் மருத்துவமனைக்கு... மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

தந்தி டிவி

புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த ராஜராஜேஸ்வரி, கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு வயிற்று வலிக்காக சிகிச்சைக்கு சென்றார். அவருக்கு கர்ப்பப் பையில் நீர்க்கட்டி இருப்பது கண்டறியப்பட்டு, கடந்த 2015-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் அறுவை சிகிச்சை மூலம் நீர்க்கட்டி அகற்றப்பட்டது. அங்கு அவருக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து உடல்நிலை மோசமாகி, கடந்த 2016-ஆம் ஆண்டு, ராஜராஜேஸ்வரி உயிரிழந்தார். இதுதொடர்பாக, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ராஜராஜேஸ்வரியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்தப் புகாரை விசாரித்த ஆணையம், அறுவை சிகிச்சை செய்த மகளிர் மருத்துவ நிபுணரும், ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகமும், ராஜராஜேஸ்வரியின் பெற்றோருக்கு 22 லட்சத்து 94 ஆயிரத்து 986 ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை