தற்போதைய செய்திகள்

உயிர் தோழிக்கு நம்பிக்கை துரோகம் செய்த பெண் SI அதிரடி கைது

தந்தி டிவி

கேரளாவில், தோழி உட்பட 2 பேரிடம் 93 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றிய, பெண் காவல் உதவி ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் ஒட்ட பாலத்தை அடுத்து தாவணூரை சேர்ந்தவர் ஆரியஸ்ரீ. ஒட்டபாலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். ஆரியஸ்ரீயின் வகுப்பு தோழி ஒருவர் பழையனூர் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு அவரை சந்தித்த ஆரியஸ்ரீ, வீடு கட்ட உதவுமாறு கூறி அவரிடம் இருந்து 93 சவரன் நகைகளையும், வெளிநாட்டில் பணிபுரியும் பொறியாளர் ஒருவரிடம் 2 லட்சம் ரூபாய் கடனும் வாங்கியுள்ளார். ஆனால், கடனாக வாங்கிய தங்க நகை மற்றும் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததால், 2 பேரும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், ஆரியஸ்ரீயிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, உண்மையை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு

BREAKING || ஐபிஎல் 2026 - அட்டவணை வெளியீடு... CSK முதலில் மோதுவது யாரோடு?

LPG Gas Issue | PM Modi Speech | LPG கேஸ் விவகாரம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சொன்ன விஷயம்

🔴LIVE : IPL 2026 | வெளியானது IPL மேட்ச் லிஸ்ட் - CSK முதலில் யாரோட மோதுது தெரியுமா?

Trichy | PM Modi | "தமிழ்நாட்டின் நாடித்துடிப்பை என்னால்..." - சொல்லிக்காட்டி பிரதமர் மோடி பேச்சு