தற்போதைய செய்திகள்

பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த குழந்தையை அலேக்காக தூக்கி சென்ற பெண் - வெளியான சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

நாகர்கோயில் பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் உறங்கிய 4 மாத பச்சிளங்குழந்தை கடத்தப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ள நிலையில், கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். நாகர்கோயில் வடசேரி பேருந்து நிலையத்தில் முத்துராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் 4 மாத ஆண் குழந்தையுடன் தங்கி வியாபாரம் செய்து வருகிறார். நேற்றிரவு வழக்கம்போல் மனைவி, குழந்தையுடன் உறங்கிய அவர், அதிகாலையில் கண் விழித்த போது குழந்தையை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவில் பெண் ஒருவர் குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சி இருந்தது. இதனையடுத்து அப்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்