தற்போதைய செய்திகள்

"எனக்கே தெரியாம என் பிள்ளைய பொண்டாட்டி அடக்கம் பண்ணிட்டா" - கண்ணீருடன் ஏங்கி ஏங்கி அழுத கணவன்

தந்தி டிவி

சென்னையில் மூன்று வயது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவியை பிரிந்த கணவன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த செல்வபிரகாசம் என்பவர், லாவண்யா என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். மாங்காட்டில் வசித்து வரும் இந்த தம்பதியினருக்கு, 3 வயதில் சர்வேஸ்வரன் என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில மாதமாக தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மனைவியின் பராமரிப்பில் இருந்து வரும் சர்வேஸ்வரன் திடீரென உயிரிழந்து விட்டதாகவும், தனக்கு தகவல் தெரிவிக்காமல் குழந்தையை அடக்கம் செய்து விட்டதாகவும் புகார் அளித்து இருக்கிறார். மேலும் மனைவி வேறு ஒருவருடன் பழகி வருவதால் தன்னுடைய மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சிறுவன் விளையாடும்போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வந்தது தெரியவந்தது. பின்னர் திடீரென சர்வேஸ்வனுக்கு மயக்கம் ஏற்பட்டு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து இருப்பதும் தெரியவந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவு அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்