தற்போதைய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு ரயில் டிக்கெட்டில் மீண்டும் சலுகை கிடைக்குமா?

தந்தி டிவி

மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் மீண்டும் சலுகை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. ரயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம் இது அரசின் வருவாய் தொடர்புடைய கொள்கை சார்ந்த விவகாரம் என தெரிவித்தது. எனவே, மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது என்றும், மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகை வழங்குவதை முடிவு செய்ய வேண்டியது மத்திய அரசு தான் என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்