தற்போதைய செய்திகள்

முதலிரவு ரூமுக்குள் நுழைந்த உடனே வித விதமாக டார்ச்சர் கொடுத்த மாப்பிள்ளை - மறுநாள் நடந்த விபரீதம்

திருமணமான மறுநாளில் உடலில் காயங்களுடன் புதுமணப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

நாகை மாவட்டம், தொழுதூரை சேர்ந்த ராஜ்குமாருக்கும், திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரை சேர்ந்த நளினி என்பவருக்கும் கடந்த 27 ஆம் தேதி தனியார் மண்டபத்தில் திருமணம் நடந்துள்ளது. 12 பவுன் நகை, கட்டில் மெத்தை பீரோ என சீர்வரிசையுடன் கொடுத்து, மணமக்களை வாழ்த்தி தொழுதூருக்கு அனுப்பி வைத்தனர். அன்றிரவு நடந்த முதல் இரவில், மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை, பாலியல் தொல்லை கொடுத்து மிருக்கத்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அச்சத்தில் மயங்கி விழுந்த நளினி, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பாலியல் சீண்டலால் உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளதாகவும், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புதுமாப்பிளை மீது நடவடிக்கை எடுக்ககோரி புதுப்பெண்ணின் தாயார் பரமேஸ்வரி, நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உறவினர்களுடன் வந்து புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்