தற்போதைய செய்திகள்

2022 ஆண்டில் பாக்ஸ் ஆஃபிஸ் - யில் ஹிட் கொடுத்த டாப் 5 நடிகைகள் யார்?

தந்தி டிவி

நடப்பு ஆண்டில் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் கொடுத்த, சிறந்த நடிகைகளின் டாப் 5 பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்த பட்டியலில், ஆர்ஆர்ஆர், கங்குபாய் கதியாவதி, பிரம்மாஸ்திரா, டாலிங்ஸ் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த 'ஆலியா பட்' முதலிடம் பிடித்துள்ளார்.

இதில் கங்குபாய் கதியாவதி உலகம் முழுவதும் வெளியாகி 203 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டியிருந்தது.

அடுத்த இடத்தை தக்க வைத்தவர் தபு. இவர் நடிப்பில் வெளியான 'த்ரிஷ்யம் 2' உலகம் முழுவதும் 293 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியுள்ளது.

திரை நட்சத்திரங்களின் கனவாக இருந்த, கல்கி காதலர்களின் 'பொன்னியின் செல்வன்' உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில், அப்படத்தில் குந்தவையாக தோன்றி ரசிகர்களை கிறங்கடித்த த்ரிஷா, இந்த பட்டியலில் 3வது இடம் பிடித்த நிலையில், நந்தினியாக தோன்றிய ஐஸ்வர்ய ராய் 4வது இடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

மேலும், ஜக் ஜக் ஜீயோ உள்ளிட்ட படங்களில் நடித்த கியாரா அத்வானி, இந்த பட்டியலில் 5வது இடம் பிடித்துள்ளார்.

CM Stalin | NDA | EPS | "பீகாரில் நடந்தது போல்" - லிஸ்ட் போட்டு சொன்ன முதல்வர்

Breaking | CMStalin | "சிலிண்டர் விலையை 60 ரூபாய் உயர்த்தி மகளிருக்கு பரிசு.." | CM ஸ்டாலின் அட்டாக்

CM Stalin | DMK | "OPS எதிர்பார்த்திருக்க மாட்டாரு" - ஓப்பனாக மேடையிலேயே பேசிய முதல்வர்

TVK Vijay | TVK Manifesto 2026 | "இது என்ன புது TAX" - விளாசிய விஜய்

TVK Vijay | TVK Manifesto 2026 | "ஒரு தங்க மோதிரம்" - ஒரே போடாக போட்ட விஜய்