தற்போதைய செய்திகள்

"இந்த இடம் எங்க இருக்கு?.. பாரபட்சம் பாக்காம ஆக்‌ஷன் எடுப்பேன்" - பரபரப்பை பற்ற வைத்த திமுக மேயர்

தந்தி டிவி

திருப்பூரில் ஒரு பங்களா வீட்டிற்கு முறைகேடாக 17 குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

கருவம்பாளையம் அருகே மேற்கு பிள்ளையார் கோயில் வீதி அருகில், ஒரு பங்களா வீட்டிற்கு முறைகேடாக 17 குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. தனி ஒரு வீட்டிற்கு 17 குடிநீர் இணைப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் எவ்வாறு வழங்கினார்கள் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். திருப்பூர் மாநகராட்சியில் உள்ள மற்ற பங்களா வீடுகளிலும் இதுபோன்ற முறைகேடு நடந்திருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். முறைகேடாக வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், இந்த இடம் எந்த பகுதியில் உள்ளது? - பாரபட்சம் பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவிட்டார். உரிய விசாரணை நடத்தி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்