ஈரோடு இடைத்தேர்தலை ஒட்டி, மற்றவர்கள் கூறும் அவதூறுகளை கேட்டு, வெற்றியை நோக்கி செல்ல வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதற்காக, அண்ணாவின் வரிகளை மேற்கோள் காட்டி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், நாட்டுக்கு நல்லாட்சி அமைத்திட நாம் இந்த விலை கொடுத்தாக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.