தற்போதைய செய்திகள்

"நாம்ம எந்நாளும் லவ்பேட்ஸு தான்"..Crush-க்கு Propose செய்த தாத்தா..

தந்தி டிவி

அமெரிக்காவில் 78 வயது முதியவர் ஒருவர், 60 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பள்ளிப்பருவ க்ரஷ்ஷிடம் காதலை வெளிப்படுத்திய நெகிழ்ச்சி சம்பவம் குறித்து விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு...

மனங்களின் சங்கமம் காதல்... இரு மனங்களின் இணைப்புப் பாலம் அது... காலங்கள் கடந்தாலும் காதல் கடந்துவிடாது... பதின்பருவத்தில் அரும்பும் காதல் காலத்திற்கும் நினைவில் தங்கிவிடும்... இதனை நிரூபிக்கும் விதமாக அமெரிக்காவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

புளோரிடாவைச் சேர்ந்த 78 வயது முதியவர் தாமஸ் மெக்மீகின்... மருத்துவரான இவர் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளி படிப்பின்போது, தனது வகுப்புத் தோழி நான்சி கேம்பெல் என்பவரை விரும்பியுள்ளார். அதை அவரிடம் பெரிதாக காட்டிக்கொள்ளாமல் க்ரஷ்-ஆக தன் மனதிலேயே பத்திரப்படுத்தி வைத்திருந்திருக்கிறார் தாமஸ்...

காலத்தின் கோலத்தால் தாமஸ் ஒருவரையும், நான்சி வேரொருவரையும் மணம் முடிக்க, இவர்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு 50ம் ஆண்டு பள்ளி ரீ-யூனியன் நிகழ்ச்சி இணைத்துள்ளது.

ஆனால் இருவருக்கும் குடும்பம், உறவுமுறை என தனிப்பட்ட வாழ்க்கை, கடமைகள் இருந்ததால் பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. இத்தகைய சூழலில் 60ம் ஆண்டு பள்ளி ரீ-யூனியன் நிகழ்ச்சிக்காக நான்சியை தாமஸ் தொடர்புகொண்டபோதுதான், இருவரும் குடும்பத்தால் தனித்துவிடப்பட்டு இருப்பதை உணர்ந்துள்ளனர்.

இதன்பிறகு இருவரும் பரஸ்பரம் பேசிப்பழகி நெருக்கமாகி உள்ளனர். இத்தகைய சூழலில், புளோரிடாவின் டம்பா விமான நிலையத்தில் தனது க்ரஷ்-ஆன நான்சியை பெருமகிழ்வுடன் வரவேற்ற தாமஸ், முழங்காலிட்டு ப்ரோபோஸும் செய்துள்ளார்.

என் வாழ்நாள் முழுவதும் காதலிக்க அனுமதிப்பாயா?... என்னைத் திருமணம் செய்துகொள்வாயா? எனத் தாமஸ் கேட்டபோது வெட்கத்தால் சிவந்த நான்சி, அவரை கட்டியணைத்து காதலை ஏற்றுக்கொண்டார்..."We'll always be lovepads"..Grandfather who proposed to Crush..

சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு 78 வயது முதியவர்களுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துவருகின்றனர் நெட்டிசன்கள்...

TN Rain `அர்னாப்’க்கு பின் அடுத்த என்ட்ரி.. ஸ்ட்ராங்காகும் `சிஸ்டம்’ தமிழகத்துக்கு கன்ஃபார்ம் உண்டு

Tasmac| நவ.1 முதல்டாஸ்மாக்கில் சரக்கு விலை உயர்கிறதா?

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்

Minister Nirmalkumar | "வேண்டுமென்றே செய்றாங்க.. " - அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு விளக்கம்

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை