தற்போதைய செய்திகள்

“பொத்தி பொத்தி அழகு பார்த்து பாதுகாக்க வேண்டும்" - அமைச்சர் துரைமுருகன்

தந்தி டிவி

திசையன்விளை அருகே உள்ள அரசூர் எம்எல் தேரி பகுதிக்கு வருகை தந்த அவர், நதி நீர் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக குளம் மற்றும் வெள்ளநீர் கால்வாய் பணிகளை பொறியியல் வல்லுநர்கள் உதவியுடன் வரைப்படங்கள் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைக்காலத்திற்குள் நதி நீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வை முடித்த பின் இடையன்குடியில் உள்ள கால்டுவெல் நினைவு இல்லத்திற்கு அமைச்சர் துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் வருகை தந்தனர். அங்குள்ள தமிழறிஞர் கால்டுவெல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு அவரது நினைவு இல்லத்தையும், அவர் பயன்படுத்திய பொருட்களையும் பார்வையிட்டார். அங்குள்ள வருகை பதிவேட்டில் அமைச்சர் துரைமுருகன் கடைசி தமிழன் உள்ளவரை உன்னை நினைவு படுத்துவோம் என கைப்பட எழுதி கையெழுத்திட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்