தற்போதைய செய்திகள்

"30, 40 வருஷமா இங்கே தான் வசிக்கிறோம்.."வீட்டு வாசலில் திடீரென தோன்றிய சுவர்

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே, வீட்டில் யாரும் இல்லாத போது, வீட்டு வாசலில் திடீரென சுற்றுச்சுவர் எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆலங்காயம் நரசிங்கபுரம் கிராமத்தில் வசந்தா என்ற 75 வயது மூதாட்டி மற்றும் கோதாண்டம், வெங்கடேஷ் ஆகிய 3 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது பெங்களூரு சென்று வளையல் வியாபாரம் செய்வது வழக்கம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூரு சென்று வீடு திரும்பினர். அப்போது, வீட்டு வாசலில் சுற்றுச்சுவர் எழுப்பியது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து எதிர்வீட்டில் உள்ள சரவணன், ராஜேந்திர பாபு ஆகியோரிடம் கேட்டபோது, அது தங்கள் இடம் என்றும், வீட்டிற்கு செல்ல வழியில்லை என்றும் கூறி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆலங்காயம் காவல் நிலையம், வருவாய் துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோதாண்டம், வெங்கடேஷ், வசந்தா ஆகியோர் மனு அளித்தனர். போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் நேரில் விசாரணை நடத்தி, கட்டுமானப் பணிகளை நிறுத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்