ஐசிசி டி20 பேட்டர்கள் தர வரிசைப் பட்டியலில் டாப்-10 இடத்திற்குள் இந்திய வீரர் விராட் கோலி முன்னேறி உள்ளார். புதிய தரவரிசைப் பட்டியலின்படி 14வது இடத்தில் இருந்து ஐந்து இடங்கள் முன்னேறி 9வது இடத்தைக் கோலி பிடித்து உள்ளார். தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் பாகிஸ்தான் தொடக்க வீரர் ரிஸ்வானும், 2வது இடத்தில் நியூசிலாந்து தொடக்க வீரர் கான்வேயும் உள்ளனர். இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார்.