தற்போதைய செய்திகள்

தூய்மை பணியாளருக்கு பாலியல் தொல்லை... "கண்டிப்பாக இது அபாண்டமான பழி" - சுகாதார ஆய்வாளர் பேசிய பரபரப்பு ஆடியோ

தந்தி டிவி
• நெல்லை மாவட்டம் திசையன்விளையில், பெண் தூய்மை பணியாளருக்கு, பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், சுகாதார ஆய்வாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். • நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில், தூய்மைப் பணியாளராக உள்ள பெண்ணிடம், சுகாதார ஆய்வாளர் நவராஜ் என்பவர், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. • பின்னர், வெளியில் கூறினால், வேலையை விட்டு நீக்கி விடுவதாக பெண் தூய்மைப் பணியாளரை நவராஜ் மிரட்டியுள்ளார். • இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் நெல்லை காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த 4ம் தேதி புகார் அளித்தார். • அதன் பிறகு, கடந்த 18ம் தேதி, தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி, சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திசையன்விளை பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். • அதனைத் தொடர்ந்து, சுகாதார ஆய்வாளர் நவராஜ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். • இந்த குற்றச்சாட்டுக்கு நவராஜ் மறுப்பு தெரிவித்த ஆடியோ வெளியாகியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்