தற்போதைய செய்திகள்

"கால் வச்சா வெட்டிடுவேன்" கதவை பூட்டி மாமியார் வீட்டுக்கு சென்ற மகன்.. நடுரோட்டில் கண்ணீருடன் நிற்கும் பெற்றோர் - மனதை உலுக்கும் சம்பவம்

தந்தி டிவி
• கோட்டகுப்பம் அடுத்த மாத்தூரைச் சேர்ந்த விவசாயி மாரிமுத்து, தனது முதல் மனைவி இறந்ததால், அவரது தங்கை லட்சுமியை 2வது திருமணம் செய்தார். • முதல் மனைவிக்கு கோவிந்தராஜ், வெங்கடேஷ் ஆகிய இரண்டு மகன்களும், 2வது மனைவிக்கு சங்கரி என்ற மகளும் உள்ளனர். • விவசாய நிலத்தை பாகப்பிரிவினை செய்து, மகன்கள் மற்றும் மகளுக்கு எழுதி வைத்தார் மாரிமுத்து. • பெற்றோர் வசித்த வீட்டை வெங்கடேஷ் சேர்த்து எழுதிக்கொண்டார். • பின்னர் திருமணம் செய்த வெங்கடேஷ், பெற்றோரை அடித்து துன்புறுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றினார். • இதனையடுத்து வாடகை வீட்டில் அந்த தம்பதியர் குடியேறினர். • வீட்டை மீட்டுத்தரக்கோரி வயதான தம்பதியர் முறையிட்டதால், பெற்றோரை வெங்கடேஷ் பராமரிக்கவும், மகன் மற்றும் மகள் மாதம் 5 ஆயிரம் ரூபாய், வங்கிக்கணக்கில் செலுத்தவும் கடந்த மார்ச் மாதம் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். • இதனால் வீட்டிலிருந்த பொருட்களுடன் மாரிமுத்து தம்பதியினர், இளைய மகன் வீட்டிற்கு சென்றனர். • அவர்களை வீட்டிற்குள் வரவிடாமல் பூட்டிக்கொண்டு, கொலை மிரட்டல் விடுத்த வெங்கடேஷ், தனது மாமியார் வீட்டில் குடிபெயர்ந்தார். • இதனால் செய்வதறியாமல் தவிக்கும் வயதான தம்பதியினர், கடந்த ஒரு வாரமாக பூட்டிய வீட்டின் வெளியே கட்டில், பீரோ மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுடன் காத்துகிடக்கின்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு