தற்போதைய செய்திகள்

கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை - சிக்கிய கடிதம் - போலீசார் தீவிர விசாரணை

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மன உளைச்சலில் கிராம நிர்வாக அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மடுவங்கரை பகுதியைச் சேர்ந்த சுவாதி பிரகாஷ் மணப்பாறை அருகே உள்ள தாதனூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர், அதே பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்த நிலையில், சக கிராம நிர்வாக அலுவலர்கள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால், நீண்ட நேரமாகியும், அவர் செல்போனை எடுக்காததால், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின் பேரில் வீட்டிற்கு சென்ற போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சுவாதி பிரகாஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

பின்னர், சடலத்தை கைப்பற்றி போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அவர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு