கமலுக்கு பெருமை சேர்த்த 'விக்ரம்' உலகளாவிய வசூல்
விக்ரம் திரைப்படம் உலகளவில் 300 கோடி ரூபாய் வசூலை கடந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி 10 நாட்களே கடந்துள்ள நிலையில், வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் அயல்நாடுகளில் தலா 100 கோடிக்கும் அதிகமான வசூலை விக்ரம் ஈட்டியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறியுள்ளன. கமல்ஹாசன் நடிப்பில் 300 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய முதல் படம் என்ற பெருமையும் விக்ரமுக்கு சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. .