• பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்
• காலமான நடிகர் மயில்சாமிக்கு வயது 57
• திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழப்பு
• நகைச்சுவை மட்டுமல்லாமல் பல்வேறு குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர்
• நடிகர் மயில்சாமிக்கு அன்பு, யுவன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
• 1984-ல் தாவணி கனவுகள் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்
• ரஜினி, கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்தவர்
• மறைந்த நடிகர் விவேக்குடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார் மயில்சாமி
• 1984ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்தவர்
• 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டவர்
• சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடல்
• திரை பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
• மயில்சாமியின் குடும்பத்தினர், நண்பர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி
• மயில்சாமியின் உடலுக்கு நாளை காலை இறுதிசடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தகவல்
• மயில்சாமியின் உடலுக்கு நடிகர் மனோபாலா, டிரம்ஸ் சிவமணி அஞ்சலி
• நடிகை கோவை சரளா, நடிகர்கள் அப்பு குட்டி, முத்துக்காளை உள்ளிட்டோர் அஞ்சலி
• நடிகர்கள் ராதாரவி, பாண்டியராஜன், ஜெயராம், செந்தில் உள்ளிட்டோர் அஞ்சலி
• மயில்சாமியின் உடலுக்கு நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கண்ணீர் மல்க அஞ்சலி