தற்போதைய செய்திகள்

கேரளாவில் குடியரசு துணைத்தலைவர்..பாலத்தின் கீழே கிடந்த வெடிகுண்டுகள்..உச்சகட்ட பதற்றம்

தந்தி டிவி

குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், கேரளாவுக்கு 2 நாள் பயணமாக வந்துள்ளதால், மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கண்ணூர் பகுதியில் உள்ள கால்வாய் பாலத்திற்கு கீழ் கிடந்த சாக்கு மூட்டைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில், சக்திவாய்ந்த 8 நாட்டு வெடிகுண்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தனர். வெடிகுண்டு வைத்தது யா ர்? என்பது குறித்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்ணூரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 3வது முறையாக நாட்டு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்