தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - அடித்து கேட்ட தந்தை... பெண்ணின் வீடு புகுந்து வெளுத்த இளைஞர்... அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே, பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்ததற்காக, தட்டிக் கேட்ட தந்தையை, இளைஞர் தனது ஆதரவாளர்களுடன் வீடு புகுந்து சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது.

இதனை ஏற்காத மாணவி, அதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

கோபமடைந்த மாணவியின் பெற்றோர், சந்தோஷ் பணியாற்றும் பேக்கரி கடைக்கு சென்று, அவரை தாக்கியுள்ளனர்.

வேலை செய்யும் இடத்திற்கு வந்து தாக்கியதால் ஆத்திரமடைந்த சந்தோஷ், தனது ஊரில் இருந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களை வரவழைத்து, மாணவியின் குடும்பத்தினரை வீடு புகுந்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மாணவியின் குடும்பத்தினரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுதொடர்பாக பரஸ்பர புகாரின் அடிப்படையில், இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது, 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்