தற்போதைய செய்திகள்

வேலூா் சிறையில்... உயிருக்கு ஆபத்தான நிலையில் முருகன் ?

தந்தி டிவி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதி முருகனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காப்பாற்ற வேண்டும் என அவரது வழக்கறிஞர் புகழேந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதி முருகன் வேலூர் மத்திய சிறையில் தண்டனை பெற்று வருகிறார்.

கடந்த 2020ம் ஆண்டு பெண் சிறை அதிகாரி மற்றும் காவலர்கள் முருகன் அறை சோதனை செய்த போது பணி செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பாகாயம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான விசாரணை வேலூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இந்த வழக்கை காரணம் காட்டி முருகனின் பரோல் மனுவை சிறைத்துறை நிராகரித்தது.

இந்த வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தி முருகன் சிறையில் 31 வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சிறையில் அவரை சந்தித்த வழக்கறிஞர் புகழேந்தி, முருகனின் உடல் எடை 19 கிலோ குறைந்துள்ளதாக கூறியுள்ளார்.

எனவே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு முருகனைக் காப்பாற்ற வேண்டும் என வழக்கறிஞர் புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்