தற்போதைய செய்திகள்

கல்வி கடன் தொகையை மோசடி செய்த வங்கி மேலாளர் - ரூ.34.10 லட்சம் பணம் மோசடி - எஸ்பிஐ வங்கி மேலாளர் கைது

தந்தி டிவி
• வேலூரில், கல்வி கடன் காப்பீட்டு தொகையை வங்கி கணக்கில் செலுத்தாமல், சுமார் 34 லட்சம் ரூபாய் மோசடி செய்த எஸ்.பி.ஐ வங்கி உதவி மேலாளரை போலீசார் கைது செய்தனர். • வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கல்விக்கடன் பிரிவில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தவர் யோகேஸ்வர பாண்டியன். • இவர் வாடிக்கையாளர்கள் செலுத்தும் கல்வி கடன் காப்பீட்டுத் தொகையை, வங்கிக் கணக்கில் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். • இதுகுறித்து வங்கி உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, யோகேஸ்வர பாண்டியன் 137 பேர் செலுத்திய கல்வி கடன் காப்பீட்டு தொகையான 34 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை, தன்னுடைய இரு வங்கி கணக்குகளில் செலுத்தியது தெரியவந்தது. • இதுதொடர்பாக வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில், யோகேஸ்வர பாண்டியனை போலீசார் கைது செய்தனர். • பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், மோசடி செய்த பணத்தை யோகேஸ்வர பாண்டியன், ஆன்லைன் ரம்மி விளையாடி இழந்தது தெரியவந்தது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்