இரட்டை ஆண் குழந்தை விவகாரத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ள விக்னேஷ் சிவன் - நயன் தாரா ஜோடிக்கு நடிகை வனிதா விஜயகுமார் ஆதரவு குரல் கொடுத்துள்ளார்... இது குறித்து சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், விக்னேஷ் சிவன் - நயன் தாரா தம்பதிக்கு குழந்தை பிறப்புக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அன்பான பெற்றோருக்குப் பிறந்த 2 அப்பாவி குழந்தைகளின் பிறப்பை விட அழகானது என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஒருவரது வாழ்வின் மிக அழகான தருணங்களை கெடுத்தால் முதலில் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், சட்டம் தெரியும் என்பது போல் பலர் பதிவிட்டு வருவதற்கு தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.