தற்போதைய செய்திகள்

வைகாசி விசாகத் திருவிழா.. முருகனுக்கு சிறப்பு ஆராதனை

தந்தி டிவி

வைகாசி விசாகத் திருவிழா.. முருகனுக்கு சிறப்பு ஆராதனை வைகாசி விகாசத்தை முன்னிட்டு, தமிழகத்திலுள்ள பிரசித்திபெற்ற முருகன் கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சென்னை வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லை மாவட்டம், உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் உதயமார்த்தாண்ட பூஜை நடைபெற்றது. வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். மேளதாளத்துடன் பெண்கள் காவடி ஏந்தியும், சிறுமிகள் பால்குடத்தை தலையில் சுமந்தும் ஊர்வலமாகச் சென்றனர்.கும்பகோணம் நாகேஸ்வரர் திருக்கோயிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள், பால்குடங்கள் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்தனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்