தற்போதைய செய்திகள்

மது தகராறில் பலியான இளைஞர்.. ஆத்திரமடைந்த பெண்கள் செய்த காரியம் - பரபரப்பு காட்சி

தந்தி டிவி

உத்தரப்பிரதேசத்தில் மதுக்கடையை பெண்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சண்டோலி பகுதியில், மது அருந்தியதால் ஏற்பட்ட தகராறில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அங்குள்ள மதுக்கடையை மூடக்கோரி போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து மதுக்கடையை அடித்து நொறுக்கிய பெண்கள், சாலையில் மதுபாட்டில்களை வீசி உடைத்தனர். தகவலறிந்து சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து பேசிய போலீசார், மக்கள் மதுக்கடையை தாக்கியபோது, அங்கிருந்த பணம் காணாமல் போனதாக புகார் கிடைத்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்