தற்போதைய செய்திகள்

சாலையில் கிடந்த மர்ம பார்சல்...போலீசாரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்கள்

தந்தி டிவி

சாலையோரம் கிடந்த மர்ம பார்சலை மீட்ட தூய்மைப் பணியாளர்கள், அதனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பழவந்தாங்கல் சிக்னல் அருகே கிடந்த பார்சல் ஒன்றை அப்பகுதியில் பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்கள் மீட்டு தங்கள் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

பார்சலுக்கு உரிமைக் கோரி யாரும் வராத நிலையில், அதனை மீனம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பார்சலைப் பெற்றுக் கொண்ட போலீசார் அதனை சோதனை செய்ததில், அதில் குழந்தைகள் பயன்படுத்தும் விளையாட்டுப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது.

இதனிடையே சாலையோரம் கிடந்த பார்சலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்