தற்போதைய செய்திகள்

2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

தந்தி டிவி

2023 - 2024 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய உள்ளார்

மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார் இந்நிலையில், 2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று காலை தாக்கல் செய்கிறார்.

இது, இவரது 5வது பட்ஜெட்டாகும். இதில், வரிச்சலுகை, தொழில் உற்பத்தியை ஊக்குவிக்க சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் கொண்டு வரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையான பட்ஜெட் என்பதால் அதிக சலுகைகள் இருக்கலாம் என மக்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Udhayanidhi Stalin | 2026-ல் எந்த தொகுதி? - உதயநிதி வைத்த ட்விஸ்ட்

Vijay Sangeetha Divorce Case | கோர்ட் மூலம் சங்கீதா வைத்த `தற்காலிக டிமாண்ட்’ - சட்டப்படி வழி?

#Breaking | Vijay | Sangeetha | "தவித்து வருகிறேன்" -பெரும் குண்டை தூக்கி போட்ட விஜய் மனைவி சங்கீதா

Vijay Sangeetha Divorce | ``விஜய் வீட்டிற்குள்..’’ - சங்கீதாவால் புதிய திருப்பம்

Vijay Sangeetha Divorce Issue | புதிய பூகம்பத்தை கிளப்பிய விஜய் மனைவி சங்கீதா