தற்போதைய செய்திகள்

உச்சக்கட்ட தீண்டாமை! - "உங்களுக்கெல்லாம் எதுவும் தர முடியாது" - வெளியான அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

பட்டுக்கோட்டை அருகே இரட்டை குவளை நடைமுறையில் இருப்பதாக கூறி இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கிளாமங்கலம் கிராமத்தில் இரட்டை குவளை நடைமுறையில் உள்ளதாகவும், முடி திருத்தும் கடைகளில் ஒருதரப்பினருக்கு முடி திருத்தம் செய்யக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக வருவாய் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து, தீண்டாமையை கடைபிடிக்கமாட்டோம் என ஒரு தரப்பினரிடம் எழுத்து பூர்வமாக உறுதி தெரிவித்தனர்.

இதனால், அந்த கிராமத்தில் இரு தரப்பினரிடையே மோதல் சூழல் உருவாகியுள்ளதால் டிஎஸ்பி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த ஊரில் உள்ள மளிகை கடையில் ஒருவர் பெட்ரோல் கேட்க, அதை தரக் கூடாது என ஊர்க்கட்டுப்பாடு உள்ளதாக அவர் சொல்வது போல வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ தீண்டாமை குறித்த சர்ச்சையை மட்டுமல்லாமல் மளிகை கடையில் பெட்ரோல் விற்கப்படுவது குறித்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்