• சேலம் மாவட்டத்தில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
• சேலம் மாவட்டம், நெத்திமேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
• மேலும், குழந்தைகளுடன் இணைந்து உணவருந்திய அவர், பள்ளியின் வகுப்பறை, கழிப்பறை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
• இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் அரசு பள்ளிக்கு வருகை தரும் சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.