தற்போதைய செய்திகள்

ரகசியமாக விற்கப்பட்ட TMT கம்பிகள்.. ரூ.800 கோடி மதிப்பிலான வரி மோசடி - சிக்கிய 3 பேர் நிர்வாகிகள்

தந்தி டிவி
• சட்டவிரோதமாக 834 கோடி ரூபாய் மோசடி செய்த டி.எம்.டி. கம்பி நிறுவனங்களின் 3 நிர்வாகிகளை ஜி.எஸ்.டி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். • டி.எம்.டி. கம்பிகள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 3 முக்கிய நிறுவனங்களில் ஒரே நேரத்தில் ஜி.எஸ்.டி அதிகாரிகள் சோதனை நடத்தினர். • முதற்கட்ட விசாரணையில், முறையான ரசீது இல்லாமல் ரகசியமான முறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு, டி.எம்.டி. கம்பிகளை விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. • மேலும் சட்டவிரோதமாக 834 கோடி ரூபாய்க்கு பணப்பரிவர்த்தனை நடந்ததும், 150 கோடி ரூபாய்க்கு வரிஏய்ப்பு செய்யப்பட்டதும் தெரியவந்தது. • இதுதவிர ரகசியமான இடத்தில் குடோன் வைத்து டி.எம்.டி கம்பிகளை விற்பனை செய்ததும் விசாரணையில் அம்பலமானது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து, ஜி.எஸ்.டி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்