தற்போதைய செய்திகள்

"நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா?" - மது போதையில் துப்பாக்கிச்சூடு | மதுரையில் பரபரப்பு

தந்தி டிவி

மதுரை அருகே கிடாய் விருந்தின் போது, நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், யார் பெரியவர் என்று காட்ட, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

திருமங்கலம் அருகே உள்ள டி.கொக்குளத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தனசேகரன் என்பவர்,நேர்த்திக்கடனுக்காக காட்டு பத்திரகாளியம்மன் கோவிலில் கிடாய் விருந்து வைத்துள்ளார். அதற்கு தனது ரியல் எஸ்டேட் நண்பர்களை அழைத்துள்ளார். விருந்தில் மதுரையைச் சேர்ந்த ரியல் அதிபர் வேதகிரி மற்றும் தொட்டியபட்டி பகுதியை சேர்ந்த கணபதி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

விருந்திற்கு வந்தவர்கள் கோவிலுக்கு பின்புறம் உள்ள மரத்தடியில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். மது போதையில் கணபதி மற்றும் வேதகிரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த வேதகிரி, நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா என காட்டகிறேன் பார் என்று கூறி, தனது காரில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அங்கிருந்து தலைதெறிக்க தப்பி ஓடினர். இது குறித்த தகவலை தொடர்ந்து, அங்கு போலீசார் வருவதை அறிந்த வேதகிரி, தப்பியோடிவிட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்