தற்போதைய செய்திகள்

கோயிலில் ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவர் - அதிர்ச்சியில் ஊர்மக்கள்.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு

தந்தி டிவி

போச்சம்பள்ளியை அடுத்த சாதிநாயக்கன்பட்டியில் மாரியம்மன் கோயில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு பணி செய்து கொண்டிருந்த கணேசன் மற்றும் சதீஷ்குமார் கோயிலுக்கு சென்ற போது, ஏற்கனவே பணி செய்து வந்த சபரி வாசன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்த‌தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார், 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில் ராஜ்குமார் மற்றும் சபரி வாசன் ஆகியோர் மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக, போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கோயில் பணி செய்ய வந்த கணேசன் மற்றும் சதீஷ்குமாரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். கோயில் பணி செய்து வந்த 2 பேர், கோயிலிலேயே சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை