தற்போதைய செய்திகள்

வனச்சரகர் கொலை வழக்கு: 32 ஆண்டுகள் கடுங்காவல்..! - வீரப்பனின் கூட்டாளிகள் இருவர் விடுதலை

தந்தி டிவி

வனச்சரகர் கொலை வழக்கில், சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளான ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சத்தியமங்கலத்தில் வனச்சரகராக பணியாற்றிய சிதம்பரம், கடந்த 1987-ஆம் ஆண்டு, சந்தன கடத்தல் வீரப்பனின் ஆட்களால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், வீரப்பனின் அண்ணன் மாதையன், ஈரோடு மாவடத்தை சார்ந்த பெருமாள், சேலம் மாவட்டத்தை சார்ந்த ஆண்டியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் மாதையனுக்கு ஆயுள் தண்டனையும், மற்ற இருவருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், வீரப்பனின் அண்ணன் மாதையன் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மற்ற இருவரையும் சனிக்கிழமை விடுதலை செய்ய உத்தரவு வந்த நிலையில், இருவரும் ஞாயிற்றுக்கிழமை கோவை மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்