சேகோர் மாவட்டம் மொகவாலி கிராமத்தில், திறந்து கிடந்த 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புபடை மற்றும் மீட்பு படையினர் ,பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. வாகனங்கள் உதவியுடன் குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 30 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ஆம்புலனஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு குழந்தையை மீட்கும் பணி நடைபெறுகிறது....