தற்போதைய செய்திகள்

கேரளாவில் அவதார்-2 வெளியாவதில் சிக்கல் - திரையரங்க உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் இடையே முரண்பாடு

தந்தி டிவி

கேரளாவில் அவதார்-2 திரைப்படம் வெளியாவதில் சிக்கல் உருவாகியுள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார்-2 திரைப்படம், வரும் டிசம்பர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் இப்படத்தை வெளியிடுவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவதார்-2 படத்தின் முதல் 3 வார கலெக்ஷன்களில் இருந்து, ஒவ்வொரு வாரமும் 60 சதவீதத்தை வழங்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் கேரளாவில் வேற்று மொழி படங்களின் கலெக்ஷனில் 50 சதவீதம் மட்டுமே விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், அதற்கு மேல் வழங்கினால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பு கூறியுள்ளது. இதனால் குழப்பம் நீடிக்கிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்