• அரசுப் பேருந்தில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்கள் மாறி மாறி காலணியால் தாக்கிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
• வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த குப்பம்பட்டு பகுதியை சேர்ந்த கொய்யா வியாபாரி சியாமளா, மாதனூரில் தனியார் கேன்டீனில் பணிபுரியும் ராணி ஆகிய இருவரும், குடியாத்தத்தில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் அரசு பேருந்தில் பயணித்தனர்.
• பேருந்தில் அமருவதில் ஏற்பட்ட பிரச்னையில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.
• ஒருகட்டத்தில் பெருந்தின் உள்ளேயே இருவரும் மாறி மாறி காலணிகளால் தாக்கிக்கொண்டனர்.
• இதனால் ஓட்டுநரும், நடத்துநரும் செய்வதறியாமல் திகைத்து, பின்னர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
• பெண்கள் இருவரையும் போலீசார் எச்சரித்தனர்.