தற்போதைய செய்திகள்

திருச்சியில் மெட்ரோ ரயில்.. எதிர்பார்ப்பை கிளப்பும் அம்சங்கள் - வெளியான புதிய தகவல் | Trichy Metro

தந்தி டிவி
• சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் இது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், திருச்சியில் 68 கிலோமீட்டர் தொலைவில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. • திருச்சியில் முக்கிய இடங்களில் மண் பரிசோதனை முடியும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. • சமயபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் வழியாக வயலூர் வரை 18.7 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு வழித்தடமும், துவாக்குடியிலிருந்து திருவெறும்பூர் வழியாக பஞ்சப்பூர் வரை 26 கிலோமீட்டர் தொலைவு இரண்டாவது வழித்தடமும், திருச்சி ஜங்சனிலிருந்து ஏர்போர்ட் வழியாக மாத்தூர் ரிங்ரோடு வரை 23 கிலோமீட்டர் தொலைவுக்கு 3-வது வழித்தடம் அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. • இவற்றில் எங்கெங்கு நிறுத்தங்கள் அமையும் என்பது குறித்த விவரங்கள் விரிவான திட்ட அறிக்கையின் போது தெரியவரும் என்றும் இன்னும் இரு மாதங்களுக்குள் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்