தற்போதைய செய்திகள்

மனைவி கண் முன்னே கள்ளக்காதலனை துடிக்க துடிக்க கொன்ற கணவன் - சமயபுரம் கோயில் முன் பயங்கரம்

தந்தி டிவி

மனைவி கண் முன்னே கள்ளக்காதலனை துடிக்க துடிக்க கொன்ற கணவன் - சமயபுரம் கோயில் முன் பயங்கரம்

மனைவியுடன் கள்ளக்காதலில் இருந்ததால் ஆட்டோ ஓட்டுநரை திட்டம் தீட்டி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் அருகே தத்தமங்கலத்தை சேர்ந்தவர் நளராஜா. இவரது மனைவி கிருஷ்ணவேணிக்கும், ஆட்டோ ஓட்டுநர் சின்னராசு என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டு, தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணவேணியும், சின்னராசும், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு ஆட்டோவில் வந்துள்ளனர். அங்கு வந்த கிருஷ்ணவேணி முதல் கணவர் நளராஜா, சின்னராசுவை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பித்து சென்றார். இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த நளராஜா மற்றும் அவரது நண்பர்களான ஷேக்அப்துல்லா, அப்துல் கனி ஆகியோரை கைது செய்தனர். கள்ளக்காதலை கண்டித்ததுடன், தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி மனைவி கிருஷ்ணவேணியை அழைத்ததாகவும், அதனை ஏற்க மறுத்ததால் ஆட்டோ ஓட்டுநர் சின்னராசுவை நண்பர்களுடன் திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி