தற்போதைய செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவன்.. நீண்ட நேரமாகியும் மீட்காததால் ஆத்திரம்..!கதறும் உறவினர்கள்

தந்தி டிவி
• திருச்சி மாவட்டம் லால்குடி அருகே, கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவனை தேடும் பணியில், போலீசார் மெத்தனம் காட்டுவதாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். • சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் சரவணன், அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். • தனது நண்பர்களுடன் மங்கம்மாள்புரம் படித்துரை கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது, எதிர்பாராத விதமாக சரவணன் தண்ணீரில் மூழ்கினார். • தகவலறிந்த சம்பவ இடத்துக்கு சென்ற லால்குடி போலீசார், தீயணைப்பு மீட்பு குழுவினர், சரவணனை தேடும் பணியில் ஈடுபட்டனர். • ஆனால், நீண்ட நேரமாகியும் மாணவனை மீட்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், லால்குடி - திருக்காட்டுப்பள்ளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். • மேலும், போதிய உபகரணங்கள் இன்றி, தேடுதல் பணியில் மெத்தனம் காட்டுவதாக குற்றஞ்சாட்டினர். • இதனிடையே, உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மறியலை கைவிட செய்தனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு