தற்போதைய செய்திகள்

வெயிலின் தாக்கத்தால் டீக்கடையில் பற்றி எரிந்த எண்ணெய் சட்டி - திருச்சி பஸ் ஸ்டாண்டில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் டீக்கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. சசிகுமார் என்பவர் நடத்தி வரும் டீக்கடையின் முன்பு, அடுப்பில் தின்பண்டங்கள் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. அப்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் எதிர்பாராத விதமாக எண்ணெய் சட்டியில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். எனினும், தீ கடை முழுவதும் பரவியதில், கடையிலிருந்த சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமடைந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு