தற்போதைய செய்திகள்

"நல்ல காலம் பொறந்திருச்சு".. மகிழ்ச்சி பூரிப்பில் பழங்குடியினர்

தந்தி டிவி

பழங் குடியினர் ஜாதி சான்றிதழ் கிடைத்ததால் தங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது என நரிக்குறவர் இன மக்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா நாராயணபுரம் பகுதியில் சுமார் 120 - க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளை கல்வி நிலையங்களில் சேர்க்க முடியாமலும், அரசு நலத்திட்டங்களை பெற முடியாமலும் மிகவும் சிரமம் அடைந்தனர். இதனை அடுத்து 61 நரிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் என உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல் ஜாதி சான்றிதழ் வழங்கினார்‌. 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்