தற்போதைய செய்திகள்

ட்ரெண்டான நடிகரின் ஹேர் ஸ்டைல்.. சலூன் உரிமையாளர்களுக்கு தலைமை ஆசிரியர் கடிதம்

தந்தி டிவி

கர்நாடகாவில், நடிகர்கள் பாணியில் மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்ய வேண்டாமென ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், மாணவர்கள் சிலர், நடிகர் சுதீப் நடித்த ஹெப்புளி திரைப்பட பாணியில் தங்கள் ஹேர் ஸ்டைலை வைத்திருந்தனர். இதையடுத்து தலைமுடியை திருத்தி பள்ளிக்கு வருமாறு தலைமை ஆசிரியர் சிவாஜி நாயக் அறிவுறுத்தினார். எனினும் மாணவர்கள் அதேபோன்று வந்ததால், சலூன் கடை உரிமையாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், பள்ளி மாணவர்களுக்கு சினிமா நடிகர்கள் பாணியில் முடி திருத்தம் செய்ய வேண்டாம் என்றும், அதனால் அவர்கள் அந்த நடிகரின் பிம்பத்தை வெளிப்படுத்த முயற்சிப்பதாகவும், கல்வியில் கவனம் சிதறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தலைமை ஆசிரியரின் வேண்டுகோளுக்கு இணங்க நடந்து கொள்வதாக சலூன் கடை உரிமையாளர்கள் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்