தற்போதைய செய்திகள்

“போவாதீங்க சார்...போவாதீங்க சார்...“ - ஒருத்தருக்காக குமுறி அழுத ஊர் மக்கள்... கண்கலங்க வைத்த நிகழ்வு

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட ஊராட்சி மன்ற செயலாளரை அப்பகுதி மக்களும் தூய்மைப் பணியாளர்களும் அழுது கொண்டே கண்ணீருடன் வழியனுப்பிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

மறைந்த மொழிப்போர் தியாகி வேசு.திருமாவளவன் என்பவரின் மகன் சிட்டிபாபு என்பவர் இந்த ஊராட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக ஊராட்சி செயலாளராக பணியாற்றினார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் ஏதும் இல்லாத நிலையில் யார் உதவி என்று கேட்டு வந்தாலும் கடன் வாங்கியாவது உதவி செய்யும் வழக்கம் கொண்டவர். பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கண்டவர்.. பொதுமக்களின் நன்மதிப்பை பெற்ற சிட்டிபாபுவுக்கு இடமாற்றம் கிடைத்த நிலையில், கண்ணீர் மல்க பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு பணியில் இருந்து விடைபெற்றார்... தூய்மைப் பணியாளர்களும் பொதுமக்களும் அழுதபடி அவருக்கு விடை கொடுத்ததுடன் இடமாற்றத்தை ரத்து செய்து சிட்டிபாபுவை மீண்டும் இதே ஊராட்சியில் பணியமர்த்த வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர்

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு