தற்போதைய செய்திகள்

மீன்பிடிக்கச் சென்றபோது நேர்ந்த சோகம்..நீரில் மூழ்கிய பள்ளி மாணவர்கள்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் ​நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

விருத்தாசலம் அருகே வி.குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான தெய்வசிகாமணி என்பவரின் 14 வயது மகன் தினேஷ், அதே பகுதியைச் சேர்ந்த 8 வயதாகும் இன்பராஜ் ஆகிய இருவரும், அங்குள்ள ஏரியில் மீன்பிடிக்கச் சென்றனர். எதிர்பாராதவிதமாக இன்பராஜ் நீரில் மூழ்கியதால் அதிர்ச்சியடைந்த தினேஷ், காப்பாற்ற குதித்தபோது இருவரும் நீரில் மூழ்கினர். அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்