உத்தரப்பிரதேசத்தில், இளநீர் மீது சாக்கடை நீரை தெளித்து விற்பனையில் ஈடுபட்ட வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி - உத்தரப்பிரதேச எல்லையில் அமைந்துள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில், இளநீர் வியாபாரம் செய்துவந்த நபர் அருகில் இருந்த சாக்கடையில் இருந்து நீரை எடுத்து இளநீர் மீது தெளித்தது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்...