கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், விஷ வண்டு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனிவாசன் என்பவருடைய மகள் மோனிகா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, விஷ வண்டு கடித்துள்ளது. இதனிடையே கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாளை பிறந்தநாள் கொண்டாட இருந்த 14 வயது சிறுமி, திடீரென உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.