தற்போதைய செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-12-2023)

தந்தி டிவி
• வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின், நேரில் ஆய்வு...மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு... • தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, பெருமழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு...தூத்துக்குடியில் ஏரல், ஸ்ரீவைகுண்டம், காயல்பட்டினத்தில் நிலைமை மோசமாக உள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்.. • தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆறாயிரம் ரூபாய் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும்...தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு... • வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...சேதமடைந்த குடிசைகள், வீடுகள், நெற்பயிர்கள், கால்நடைகள் உள்ளிட்டவற்றிற்கும் நிவாரண உதவிகளை அறிவித்தார்... • சென்னை வெள்ளம், தென் மாவட்ட வெள்ளம் ஆகியவற்றை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்கவில்லை, நிதியும் வழங்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...தமிழகத்தில் நேரிட்ட 2 பெரிய வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்ததாகவும் விளக்கம்... • அடிக்கடி டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையான நிதி பெற்றுத்தர வேண்டும்...முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்