வசை சொற்களே பலமாக மாறுகிறது - பிரதமர் மோடி...தினமும் வசை சொற்களை வாங்குகிறேன்...வசை சொற்களே பலமாக மாறுகிறது என்றும் பிரதமர் மோடி பேச்சு.
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகத்தில், வெளுத்து வாங்கும் வடகிழக்கு பருவ மழை...இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு.
எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களை கடந்து பொது மக்கள் பாராட்டி வருகின்றனர் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்...எத்தகைய மழையையும் சமாளிப்போம் என்றும் திட்டவட்டம்.
சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட இடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு...சிவ இளங்கோ சாலையில், மழைநீர் வடிகால் பணிகளையும் பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை.
சென்னையில், நீர்நிலைக்கு அருகே வசிக்கும் பொது மக்களுக்கு கொசு வலை விநியோகம்...முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
இன்றிரவு சீர்காழி செல்ல உள்ளதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்...கடலூர், மயிலாடுதுறையிலும் மழை பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிப்பு.
"சீர்காழியில் உள்ள 2 ஆயிரத்து 620 மின் மாற்றிகளில் 370 மின்மாற்றிகள் பாதிப்பு... 200 மின் கம்பங்கள் சேதம்...இன்று இரவுக்குள் சீரான மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி.