தற்போதைய செய்திகள்

நஷ்டம் கட்டுக்குள் வர... மாந்திரீகரை நம்பி மனைவி, பிள்ளைகளுக்கு 4 ஆண்டுகளாக... உ.பியை அலறவிட்ட உப்பு வியாபாரி

தந்தி டிவி

தன் குடும்பத்தினரை 4 ஆண்டுகளாக தொழிலதிபர் ஒருவர் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்த அதிர்ச்சிகர சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. சித்திரக்கூட் பகுதியை சேர்ந்தவர் உப்பு வியாபாரியான காசி... இவர் தன் மனைவி, 2 பிள்ளைகளைக் கடந்த 4 ஆண்டுகளாக வெளியில் விடாமல் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்துள்ளார். தான் மட்டும் வெளியில் சென்று தேவையான உணவு, குடிநீர் ஆகியவற்றை வாங்கி வந்ததோடு, வீட்டிற்குள்ளே மர்மான முறையில் மாந்திரீக பூஜைகளை செய்து வந்துள்ளார். காசிக்கு தொழிலில் நஷ்டம் ஆனதால், அவருக்கு ஆலோசனை வழங்கிய மாந்திரீகர் ஒருவர், மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் வைத்திருந்தால் நஷ்டம் கட்டுக்குள் வரும் என ஆலோசனை வழங்கவே, காசியும் அவ்வாறே குடும்பத்தினரை சிறை வைத்துள்ளார். இது தொடர்பான தகவலறிந்து வந்த காவல்துறையினர் வீடு பூட்டி இருந்ததால், கதவை உடைத்து உள்ளே சென்று 3 பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்